புதுக்கோட்டை: மூன்று வாகனங்கள் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் மற்றும் 1 சிறிய ரக சரக்கு வாகனம் என மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்ட பொதுமக்கள், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சடலக்கலை போலீசார் காரில் வந்தவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறன்றர். மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






