புதுக்கோட்டை: கடன் தொல்லையால் தீக்குளித்து பெண் தற்கொலை

கடன் தொகையை செலுத்தக்கோரி நிதி நிறுவன ஊழியர்கள் ராதிகாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை: கடன் தொல்லையால் தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஞானவேல். டிரைவர். இவரது மனைவி ராதிகா (37 வயது). ஞானவேல் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக தவணை தொகையை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடன் தொகையை செலுத்தக்கோரி நிதி நிறுவன ஊழியர்கள் ராதிகாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த ராதிகா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com