புதுக்கோட்டை தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம்

இன்பநிதி பாசறை பெயரில் சுவரொட்டி ஓட்டியதால் புதுக்கோட்டை தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம்
Published on

புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கப்பட்டதை போல சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டியில் இன்பநிதி பாசறை, செப்டம்பர் 24-ந் தேதி மக்களுக்காக நலத்திட்ட உதவிகள் புதுக்கோட்டை மாவட்டம் எனவும், இன்பநிதி புகைப்படத்திற்கு கீழே எதிர்காலமே... எனவும், மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை, போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை எனவும் அச்சிடப்பட்டு, பாசறை மாநில செயலாளர் டாக்டர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் க.செ.மணிமாறன் எனவும், அவர்களது புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சுவரொட்டி அச்சடித்து ஒட்டிய விவகாரத்தில் தான் 2 பேரும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com