புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் பணியிடை நீக்கம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் பணியிடை நீக்கம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அரசு பஸ் மோதி இறந்தார். இதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.27 லட்சத்து 68 ஆயிரத்து 847 இழப்பீடு வழங்க புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் இருந்து இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்ற பணியாளர்கள் கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இலுப்பூர் செல்ல இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்காமல் உரிய முறையில் பணியாற்றாததால் அரசு போக்குவரத்து கழகத்தில் விபத்து வழக்குகளை கண்காணிக்கும் உதவி மேலாளர் கலைவாணனை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் அரசு போக்குவரத்து கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com