புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இறந்த வீரபாண்டியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமம், பிலாபுஞ்சை பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகன் வீரபாண்டி (வயது 21) என்பவர் கடந்த 23.3.2025 அன்று ஆலங்குடி வட்டம், மாங்காடு கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான பலா தோட்டத்தில் பலாக் காய்கள் பறித்துக்கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பியிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com