பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள்: தென்காசியில் அதிமுக சார்பில் மரியாதை..!

நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள்: தென்காசியில் அதிமுக சார்பில் மரியாதை..!
Published on

சென்னை,

மாமன்னர் பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பூலித்தேவன் பிறந்த நாள்

இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளான 1.9.2026 செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு, 'தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவனுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்

திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, என். தளவாய்சுந்தரம், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி , சுதா கே. பரமசிவன், சி.த. செல்லப்பாண்டியன், என். சின்னத்துரை, ராஜன் செல்லப்பா, பாஸ்கரன், சண்முகநாதன், ராஜேந்திரன், இன்பதுரை, ராஜலெட்சுமி, சுப்பையா பாண்டியன், சுசீகரன், கிருஷ்ணமுரளி, , அய்யாத்துரைபாண்டியன், கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

நிர்வாகிகளுக்கு அழைப்பு

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுசீகரன் மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாமன்னர் பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி மாநகர் ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com