2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்

2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
Published on

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்(பால்வளம்) சிவக்குமார்:- பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் 197 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுர் தேவைக்காக சுமார் 19 ஆயிரத்து 300 லிட்டர் போக மீதமுள்ள பால், 11 பால் குளிர்வு மையங்களில் தலா 5 ஆயிரம் லிட்டர் வீதம் 55 ஆயிரம் லிட்டர் பால் குளிர்விக்கப்பட்டு, சென்னை பெருநகர தேவைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பாட்டிலில் பால் விற்பனை செய்வது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com