குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது ”புரெவி” - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது ”புரெவி” - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வங்க கடலில் மையம் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com