புழல் சிறை கைதி திடீர் சாவு

சென்னையில் புழல் சிறை கைதி திடீரென உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புழல் சிறை கைதி திடீர் சாவு
Published on

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காஜா நவாஸ்(வயது 40). இவர், கடந்த மார்ச் மாதம் வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக வண்ணாரப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக சக கைதிகளிடம் காஜா நவாஸ் தெரிவித்தார். உடனடியாக அவருக்கு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கைதி காஜா நவாஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் நெஞ்சு வலியால்தான் இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com