தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

பாலக்கோட்டில் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி கேசவன் (55). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மலைப்பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com