உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்

தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்கள் மீது கியூ.ஆர். கோடு ஸ்கேனர்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மற்றும் பழமையான மரங்களை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆரவத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அந்த வகையில் தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து வகை மரங்கள் மீதும் விரைவு துலங்கி எனப்படும் கியூ.ஆர். கோடு ஸ்கேனர்களை பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் மரத்தின் ஆங்கில பெயர், தமிழ் பெயர், தாவரவியல் பெயர், எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது, அதன் பயன்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரிந்து கொள்ள முடியும். பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com