புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் விழா

புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் விழா
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் விழா
Published on

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு புதிதாக உற்சவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நால்வர் விழா மற்றும் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நால்வருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் யாக பூஜை நடந்தது. பின்னர் மாலையில் நால்வர் வீதி உலா நடைபெற்றது. இந்த வீதி உலா கோவிலில் இருந்து தொடங்கி ராஜ வீதி, நம்பியூர் ரோடு, ஜவகர் மெயின் ரோடு, ஆசாத் வீதி, சுல்தான் ரோடு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com