விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
Published on

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் 30 வயதிற்குட்பட்ட மாவட்ட அளவிலான அணியினை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான தகுதி தேர்வானது வருகிற 22-ந் தேதி காலை 9 மணி அளவில் விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு 1.9.1993 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்திருப்பவர்கள் தகுதி உடையவர்கள். தேர்வில் பங்குபெற விரும்பும் வீரர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com