

சென்னை,
கனிமவளங்கள் தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பது, விநியோகிப்பது குற்றச்செயலாகும். விதிகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிய, வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.