கணவருடன் தகராறு: 6-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை


கணவருடன் தகராறு: 6-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
x

கோப்புப்படம் 

சென்னையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை அடையாறு கெனால் பேங்க் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் ஆண்டனி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்ஜான் பீவி (25 வயது). ரம்ஜான் பீவிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வந்தார்.

கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால், வியாசர்பாடி மூர்த்திங்கன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது அம்மா வீட்டுக்கு ரம்ஜான் பீவி வந்துள்ளார். இந்த நிலையில், கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைத்துச் செல்ல ஆண்டனி நேற்று மாலை வியாசர்பாடிக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் இருந்து ரம்ஜான் பீவி திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த ரம்ஜான் பீவியை உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story