அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் உடனடியாக மூடப்படும் - அமைச்சர் பிரபு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது பெயரில் எவரும் பரிசுகளையோ அல்லது பணத்தையோ வசூலிக்க கூடாது என்று அமைச்சர் பிரபு கூறியுள்ளார்.
அமைச்சர் பிரபு
Published on: 

சென்னை,

அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் உடனடியாக மூடப்படும் என அமைச்சர் பிரபு கூறியுள்ளார்.

என் பெயரைப் பயன்படுத்தி தீபாவளி பரிசுகள் பெறக்கூடாது என குவாரி உரிமையாளர்களுக்கு இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் டி. கே. பிரபு, குவாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது பெயரில் எவரும் பரிசுகளையோ அல்லது பணத்தையோ வசூலிக்க அனுமதி இல்லை .

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், அவர்களுக்குப் பணம் அல்லது பரிசு வழங்குபவர்கள் மீதும் கடுமையான சட்ட நட வடிக்கை எடுக்கப்படும். விதி முறைகளை மீறும் கல்குவாரிகள் மற்றும் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் உடனடியாக மூடப்படும் என்றார்.

X