பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜிடம் சால்வை பெறாத ராகுல்காந்தி

ராகுல்காந்தி மேடைக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜிடம் சால்வை பெறாத ராகுல்காந்தி
Published on

குமரி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மண்டைக்காடு அருகில் உள்ள லெட்சுமிபுரம் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தியுடன் மேடையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் கலந்து கொண்டார்.

ராகுல்காந்தி மேடைக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க. வேட்பாளர்கள் சால்வைஅணிவித்து வரவேற்றனர். அப்போது மனோ தங்கராஜ் சால்லை அணிவிக்கச் சென்றபோது, ராகுல்காந்தி உரையாற்ற தயாரானார். கை சைகை காண்பித்து கொஞ்சம் பொறுங்கள் என்றுகூறிவிட்டு உரையாற்றச் சென்றுவிட்டார். பேசி முடித்ததும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்படர் தளத்துக்கு செல்ல காரில் ஏறி சென்று விட்டார்.

இதனால் அமைச்சர் மனோ தங்கராஜ் ராகுல்காந்திக்கு சால்வை அணிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மனோதங்கராஜை அமைச்சர் என ராகுல்காந்தியிடம் அறிமுகம் செய்து வைக்காததுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பேசிக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com