ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்: மாணிக்கம் தாகூர் பேட்டி

வருகிற 9-ந்தேதி தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படுமென மாணிக்கம் தாகூர் கூறினார்.
ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்: மாணிக்கம் தாகூர் பேட்டி
Published on

சென்னை,

தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

முதல்-அமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.

பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிற, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com