ராகுல் காந்தி இன்று நீலகிரி வருகை


ராகுல் காந்தி இன்று நீலகிரி வருகை
x

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நீலகிரி வருகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு வருகை தருகிறார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு தனி ஹெலிகாப்டரில் கூடலூர் வந்து இறங்குகிறார். பின்னர் தனியார் பள்ளிக்கூட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ராகுல் காந்தி மீண்டும் மைசூரு திரும்புகிறார்.

அவரது வருகையையொட்டி, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ராகுல் காந்தி வந்து இறங்கும் மைதானம் முதல் காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்லும் சாலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story