இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுளார்.
இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தன்னை இந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள், பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசி உள்ளார். உலக வரலாற்றிலேயே மதத்தின் பெயரில் போர் செய்யாத, தன் மதத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு கூட நன்மை செய்யக்கூடிய மதம் சனாதன இந்து தர்மம் (மதம்). இந்துக்கள் அனைத்து மத கடவுள் படங்களை கூட தனது வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய அளவில் நல்லிணக்கத்தோடு இருக்கக்கூடியவர்கள். உலகின் பல நாடுகளில் வசிக்கக் கூடிய இந்துக்களால் அந்த நாட்டில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. அந்த நாட்டில் உள்ள மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் உலகத் தலைவர்கள் இந்து இதிகாச புராணங்கள் மற்றும் கடவுள்களை போற்றி பெருமைப்படும் வகையில் பேசி வருகிறார்.

இந்துமத நூல்கள் அனைத்தும் உண்மை, சத்தியம் போன்ற உயர்ந்த தத்துவங்களையே வலியுறுத்துகிறது. இந்து மத தத்துவங்கள், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம் ஏதும் அறியாமல் இழிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் பேசி இருப்பது வேதனைக்குரியது. சிறுபான்மையினரை தாஜா செய்து அதன் மூலம் அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக பாரத தேசத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் இந்துக்களை இழிவுபடுத்திய ராகுல்காந்தியை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com