ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை

ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரமாட்டார் என்றும் பரவலான கருத்து அரசியல் வட்டாரங்களில் பரவியது.
ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள் ளது. தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட் சியின் மேலிடத்தலைவர்கள் இதுவரை தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை. குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

ராகுல்காந்தி தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், அவரது விருப்பத்திற்கு மாறாக தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்ததாகவும், இதனால் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரமாட்டார் என்றும் பரவலான கருத்து அரசியல் வட்டாரங்களில் பரவியது. ஆனால் ராகுல்காந்தியின் பயணத்திட்டத்தை காங்கிரஸ் வட்டாரம் நேற்று உறுதி செய்தது.

அதன்படி நாளை (சனிக்கிழமை) மற்றும் 20-ந் தேதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். நாளை பொன்னேரி, சோளிங்கர், துறையூர் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 20-ந் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதுவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேடை ஏறாத ராகுல்காந்தி நாங்கு நேரி தொகுதியில் மு.க.ஸ்டாலினுடன் பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com