அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ராகுல் காந்தி வருகை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ராகுல் காந்தி வருகை
Published on

மதுரை,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் தற்போது வரை 350க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த போட்டியை நேரில் காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தற்போது அவனியாபுரத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக அவனியாபுரம் சென்றடைந்தார். அவருடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். போட்டி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வி.ஐ.பி. மேடையில் அமர்ந்து அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com