ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயன் தராது - வானதி சீனிவாசன்

ராகுல் காந்தியின் பாதயாத்திரை அவரது உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கலாம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயன் தராது - வானதி சீனிவாசன்
Published on

கோவை,

ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இறந்து போன காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் மூலம் உயிரூட்ட முடியுமா? என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பாஜகவிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே கட்சியை மீட்க ராகுல் காந்தி இந்த பலப்பரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிப்போனாலும் சரி, மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அவரது உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கலாம். நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயன் தராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com