பீகார் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தினத்தந்தி 27 Aug 2025 5:48 AM IST (Updated: 27 Aug 2025 8:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு சென்றார்.

சென்னை,

பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17-ந்தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வருகிற 1-ந்தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரை பேரணியை 1,300 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு சென்றார். தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து சாலைமார்க்கமாக சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்துகொள்கிறார்.

இந்த பேரணி நிறைவடையும் இடத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வருகிறார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

1 More update

Next Story