

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜெகவீரபாண்டியனின் வீட்டில், விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.1.50 கோடிக்கு நகைகள் வாங்கிய ரசீதுகள் சிக்கின.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன், தமிழக சுகாதாரத்துறையில் துணை இயக்குனராக சிவகாசியில் பணியாற்றினார். பணிக்கான ஒப்பந்த தொகையை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகவீரபாண்டியனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கல்லுாரி மாணவியான அவரது மகள், எந்த பணிக்கும் செல்லாத நிலையில் ரூ.1.50 கோடிக்கு எப்படி நகைகள் வாங்கினார் என போலீசார் விசாரித்தனர். அப்போது 2019 முதல் 2026 வரை வாங்கப்பட்ட தங்க நகைகள், ரசீதுகளுக்குரிய நகைகள் அனைத்தும் வங்கி லாக்கரில் இருப்பதாக ஜெகவீரபாண்டியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நகைகளுக்கான ரசீதுகளையும், வங்கி லாக்கருக்கான சாவியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.