

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா? பரிசு பொருட்கள் எதுவும் கொடுக்கப்படுகிறதா? என்று அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித்துறையும் அவ்வப்போது அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பரான சங்கர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரூர் - கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ், சக்தி மெஸ் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் தொகுதியில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது. செந்தில் பாலாஜி இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.