மயிலாடுதுறையில், ரெயில் மறியல் போராட்டம்

மயிலாடுதுறையில், ரெயில் மறியல் போராட்டம் நடத்த பயனாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மயிலாடுதுறையில், ரெயில் மறியல் போராட்டம்
Published on

மயிலாடுதுறையில் ரெயில் பயனாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ரெயில் பயணிகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயலர் சாமிகணேசன், பொருளாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கத் தலைவர் வேலுகுபேந்திரன், பேராசிரியர் முரளிதரன், இயற்கை விவசாயி ராமலிங்கம், கருணாஜிசுவாமிகள், முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் திருச்சி-மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை-விழுப்புரம் பாசஞ்சர் ரெயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும், மயிலாடுதுறை ஜங்ஷனில் எந்த ரெயில்கள் எந்த நடைமேடையில் நிற்கும் என்பதை முறையாக முன்கூட்டியே அறிவிப்பு செய்ய ரெயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் செய்துகொடுக்க வேண்டும் தவறினால் வரும் நவம்பர் 21-ம் தேதி ரெயில் பயனாளர்கள் போராட்டக்குழு தலைமையில் வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்களை திரட்டி மயிலாடுதுறையில் ரெயில் மறியல் போராட்டம் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ரெயில் பயனாளர்கள் சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com