காருக்குள் மர்மமாக இறந்து கிடந்த ரெயில்வே ஊழியர்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை சந்திப்பில் காருக்குள் மர்மமான முறையில் ரெயில்வே ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மர்மமாக பலி
Published on: 

நெல்லை தச்சநல்லூர் புது அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 38). நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மனைவி உள்ளார். வேல் ராஜ் கடந்த 30-ந்தேதி மதுரையில் நடைபெரும் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வில் பங்கேற்பதற்காக, வீட்டில் இருந்து தனது காரில் புறப்பட்டு சென்றார்.ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு துர்கா பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை.

காருக்குள் பிணமாக கிடந்தார்

இதனால் சந்தேகமடைந்த துர்கா, நேற்று காலை சந்திப்பு ரெயில் நிலையப்பகு திக்கு சென்று கணவரை தேடினார். அப்போது ரெயில் நிலையத்தின் மேற்குப்பகுதியில் உள்ள ஊழியர்கள் குடியிருப்புக்கு பின்புறம் வேல்ராஜின் கார் நிறுத்தப்பட் டிருப்பதை கண்டார். காரின் கண்ணாடிகள் முழுமையாக ஏற்றப்பட்டிருந்ததால், உள்ளே பார்க்க முடி யவில்லை. உடனடியாக துர்கா வீட்டுக்குச் சென்று மாற்றுச் சாவியை எடுத்து வந்து காரை திறந்தபோது, உள்ளே வேல்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வேல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வேல்ராஜின் சாவுக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X