மக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் உயரும் - மத்திய மந்திரி சோமண்ணா

மத்திய ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரெயில் நிலையத்தை இன்று ஆய்வு செய்தார்.
மக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் உயரும் - மத்திய மந்திரி சோமண்ணா
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைய இருப்பதையொட்டி, அங்கு புதிய ரெயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரெயில் நிலையத்தை இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கு புதிய ரெயில் நிலையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருந்து வருகிறது. கொரோனா நோய் பரவலுக்கு பிறகு அனைத்து கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. ஆனால், ரெயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படவே இல்லை. மக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் சென்ற மத்திய ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, சாமி தரிசனம் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com