ரெயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்

இரணியல் அருகே ரெயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும். பொதுமக்கள் வலியுறுத்தல்
ரெயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்
Published on

திங்கள்சந்தை, 

இரணியல் அருகே திருவனந்தபுரம்-கன்னியாகுமாரி இரட்டை ரெயில் பாதைக்காக திங்கள்சந்தை- அழகியமண்டபம் சாலையில் நெய்யூர் பகுதியில் மம்பால பணி நடைபெற்று வருகிறது. இந்த பால பணியை உடனே முடித்து வாகன போக்குவரத்து விட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ரெயில் நிலைய மேம்பாலத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி ஜல்லிகள் நிரப்பி வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்பொழுது மோட்டார் சைக்கிள்கள், மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள் சென்று வருகின்றன. ஜல்லிகள் இறுகி தார் சாலை அமைத்ததும் அரசு பஸ்கள் சென்று வர அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் நெய்யூர் - பரம்பை ரெயில்வே மேம்பாலத்திற்காக குழிகள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டது. தற்போது 5 ராட்சத இரும்பு ராடுகளை நிலை நிறுத்தும் பணி நடக்கிறது. இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை விரைவில் முடித்து அரசு பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com