மூடப்படாத ரெயில்வே கேட் - ரெயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு


மூடப்படாத ரெயில்வே கேட் - ரெயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 16 Aug 2025 1:57 PM IST (Updated: 16 Aug 2025 4:14 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் வரும் நேரத்தில் ரெயில்வே கேட் மூடாமல் இருந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்,

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது.

இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து, ரெயிலை விட்டு கிழே இறங்கி வந்து கேட்டை மூடும்படி கேட் கீப்பரிடம் தெரிவித்தார். இதையடுத்து கேட் மூடப்பட்ட பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரெயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என விளக்கம் அளித்துள்ளார். எனினும், இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story