விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி; அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடந்த தண்டவாள பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி; அதிகாரிகள் ஆய்வு
Published on

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளின் பாரத்தை தாங்கக்கூடிய வகையில் ரெயில்வே தண்டவாளங்கள் உறுதியாக இருக்கின்றனவா என்று அவ்வப்போது பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது விழுப்புரம் ரெயில் நிலைய 1, 2-வது நடைமேடைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவினரும், சிக்னல் பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும், புதியதாக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் போடும் பணிகளும், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதுபோல் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிகளை நேற்று கோட்ட இருப்புப்பாதை பொறியாளர் சுருளா சத்தியநாராயணன், துணை பொறியாளர் பானுசந்திரன், பொறியாளர் சிவசக்திபாலு, சிக்னல் பிரிவு முதன்மை பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் கிருஷ்ணசாமி, பரமசிவம், முத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com