விரைவு ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு

2025 ஜனவரி முதல் கூடுதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
விரைவு ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டாலும், முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போரின் எண்ணிக்கை எப்போதும் அதிகரித்து காணப்படும். விடுமுறை தினங்களில் பொதுப்பெட்டியில் பயணிக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஒருசில விரைவு ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், 2025 ஜனவரி முதல் கூடுதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 2 அல்லது 3 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ள ரெயில்கள், 4 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு முன்பதிவில்லாத பெட்டி இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com