நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்கள் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (சனிக்கிழமை) 20 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 10 மி.மீட்டரும், 26-ந் தேதி 14 மி.மீட்டரும் மற்றும் 27-ந் தேதி 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும், நாளையும் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். இன்றும், 26-ந் தேதியும் தென் மேற்கு திசையில் இருந்தும், நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு திசையில் இருந்தும், 27-ந் தேதி வடமேற்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

பரவலாக மழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com