எருமப்பட்டியில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைப்பதிவு

எருமப்பட்டியில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைப்பதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அன்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. எருமப்பட்டியில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழை பதிவானது.

இதனிடையே நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- எருமப்பட்டி-50, கொல்லிமலை செம்மேடு-31, நாமக்கல்-26, மங்களபுரம்-7, சேந்தமங்கலம்-4, மோகனூர்-4, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-1. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com