தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழைஅதிகபட்சமாக பென்னாகரத்தில் 31 மி.மீ. பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழைஅதிகபட்சமாக பென்னாகரத்தில் 31 மி.மீ. பதிவு
Published on

தர்மபுரி மாவட்டத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பென்னாகரத்தில் 31 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பகுதி வாரியாக பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மாரண்டஅள்ளி-4, பென்னாகரம்-31, ஒகேனக்கல்-24. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏரிகள், குளங்களில் மழை நீர் கணிசமாக தேங்கி உள்ளது. இதனால் பயிர் சாகுபடி தொடர்பான பணிகள் மாவட்ட முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com