ஓசூர் பகுதியில்ஆலங்கட்டி மழையால் பசுமைக்குடில்கள் சேதம்

ஓசூர் பகுதியில்ஆலங்கட்டி மழையால் பசுமைக்குடில்கள் சேதம்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆலங்கட்டியுடன் பலத்த மழை பெய்து. இந்த மழை காரணமாக, ஓசூர் அருகே பி.முதுகானபள்ளி கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டிருந்த பீன்ஸ், தக்காளி, கொத்தமல்லி பயிர்களும் மற்றும் பசுமைக்குடில்களும் முற்றிலும் சேதமடைந்தன. இதேபோல் பாகலூர், பேரிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேல் அமைத்திருந்த பசுமைக்குடில்களும் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், சேதமடைந்த பசுமைக்குடில்களை முறையாக சர்வே செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com