

நாகை அருகே உள்ள கீழ்வேளூர், சிக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. கீழவேளூர் - கச்சனம் சாலை, சந்தைத்தோப்பு, திருக்கண்ணங்குடி, வடக்குவெளி, கருணாவெளி, புத்தர்மங்கலம், காருதாக்குடி, பட்டமங்கலம், சொட்டால் வண்ணம், வடக்காலத்தூர், சிக்கல், பொரவச்சேரி, ராமர்மடம், ஆழியூர் அகரகடம்பனூர், கோவில் கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.