சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசான மழை

சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது.
சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசான மழை
Published on

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், துரைப்பாக்கம் உள்பட நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com