சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
Published on

சென்னை,

வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை, பாரிமுனை, மதுரவாயல், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், அனகாபுத்தூர், ஆவடி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com