மழை நீர் வடிகால் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்க பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அதன்படி சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

மேலும் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com