மழைநீர் தேங்கியது

அதிராம்பட்டினத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. எனவே வடிகால் அமைத்து தர வேண்டும் என பற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் தேங்கியது
Published on

அதிராம்பட்டினத்தில் பெய்த பலத்த மழையால் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. எனவே வடிகால் அமைத்து தர வேண்டும் என பற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை

அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மகிழங்கோட்டை, கருங்குளம், கரிசக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு, விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளும் பஸ் நிலையம் அருகில் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகள் மிகவும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளது. இதனால் சிறிய அளவில் மழை பெய்தாலே பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கிவிடும்.

குளம் போல் தேங்கிய மழைநீர்

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் இந்த பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வளாகம் வெறிச்சோடியது. இன்று(செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகள் தேங்கிய மழைநீரால் தங்களது வகுப்பறைக்கு செல்லமுடியாத அவலம் உள்ளது. பள்ளியில் வடிகால் இல்லாததால் மழைநீர் வெளியே செல்லமுடியாமல் தேங்கி விடுகிறது. எனவே வடிகால் அமைத்து கொடுத்தால் மழைநீர் வெளியேற வசதியாக இருக்கும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடிகால் அமைத்து தர வேண்டும்

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாணவ- மாணவிகள் நலன் கருதி 2 பள்ளிகளிலும் வடிகால் அமைத்தால் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று 2-வது நாளாக மழை இரவு பலத்த மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com