8 மாதங்களாக விவசாய நிலங்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

8 மாதங்களாக விவசாய நிலங்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 மாதங்களாக விவசாய நிலங்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் அடிக்கடி மழை பெய்ததால் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு நிரம்பிய ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளது. இதனால் அனைத்து விவசாய கிணறுகளும் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து தற்போதும் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள 8 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை, வாழை, நெல், சப்போட்டா உள்ளிட்டவை பயிரிட்டுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இங்குள்ள மேட்டுப்பகுதி நிலத்தில் இருந்து நிரம்பி வரும் மழை நீர் இன்த 8 ஏக்கர் விவசாய நிலத்தில் வந்து தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால் நெல், சப்போட்டா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் இங்குள்ள விவசாயிகள் செய்வதறியாமல் கவலைக்குள்ளாகி உள்ளனர். எனவே 8 மாதங்களாக சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com