தமிழ்நாட்டில் இயல்பைவிட சுமார் 15 சதவீதம் மழை குறைவு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழைப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இயல்பைவிட சுமார் 15 சதவீதம் மழை குறைவு
Published on: 

சென்னை,

அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதி வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் முக்கிய மழைக் காலமாகும். மாநிலத்தின் ஆண்டு மழையில் சுமார் 48 சதவீதமும், கடலோரப் பகுதிகளில் 60 சதவீதமும் இதன் மூலமே கிடைக்கிறது. கோடைக் கால குடிநீர் தேவைக்கு இந்த ஏரி நீர் ஆதாரமாக உள்ளது.

ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர் சேமிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இதுவரை இயல்பை விட சுமார் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழைப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய 342.4 மி.மீ. மழைக்குப் பதிலாக 289.4 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல்நினோ சூழலால் வங்கக்கடலில் போதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகவில்லை. மேலும், முரசு மற்றும் அக்வான் புயல்கள் திசை மாறிச் சென்றதாலும், ஈரப்பதமற்ற வறண்ட காற்று வீசியதாலும் மழை இடைவெளி ஏற்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதன் மூலம் மழைப்பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

X