மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

அருவியில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
Published on

தென்காசி,

கொளுத்தும் கோடை வெயிலுக்கு நடுவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. நேற்று காலையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனை அறிந்த சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து சீராக வந்துகொண்டிருப்பதால் இன்றும், நாளையும் கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com