மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நாகை அவுரித்திடலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் முருகேசன், ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஆண்டனி ஸ்டீபன், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவுரி திடலில் தொடங்கிய ஊர்வலமானது முக்கிய வீதிகளின் வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது.

காணொலிக்காட்சி வாகனம்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழை நீரை சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் ஊர்வலமாக சென்றனர். அரசு அலுவலக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தனியார் கட்டிடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுமையாக சேகரித்து மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது குறித்தும், மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் அவசியம் குறித்தும் காணொலிக்காட்சி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் தியாகராஜன், யூசுப், ராஜசேகர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com