ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மீண்டும் புகுந்த மழை நீர்

ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மீண்டும் புகுந்த மழை நீர்
Published on

ராமேஸ்வரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனிடையே ராமேசுவரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்து அதிகாலை வரையிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மழையால் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் முழுவதும் மழை நீர் அதிகளவு குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மழை நீரில் மிகவும் கஷ்டப்பட்டு இறங்கி நடந்து சென்று தரிசனம் செய்து செல்கின்றனர்.

ராமேசுவரத்தில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கி நிற்பது தொடர்கின்றது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com