குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றவேண்டுமெனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
Published on

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தை அடுத்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் அங்குள்ள பள்ளங்களில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com