அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்வு

அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்வு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் நேரடி நியமன வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கருணை அடிப்படையில் சேரும் பணியிடங்களுக்கான வயது உச்ச வரம்பில் தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை. மேலும் மாற்றுத்திறனாளி பட்டியலினத்தவர்களுக்கான சட்டப்படியான வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, மற்றும் தளர்வு உள்ளிட்டவை தொடரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com