ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா

ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடந்தது.
ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
Published on

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 19-ம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா கடந்த 5-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், சக்தி கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் கோவிலில் இருந்து தொடங்கி காளி நடனமாடி தோப்புத்தெரு ருத்ராபதியார் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு நின்று காளியம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குத்தாலம் சின்ன செங்குந்தர் தெரு மற்றும் பெரிய செங்குந்தர் தெரு கிராமமக்கள் செய்து இருந்தனர். திருவிழா வருகிற 28-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் விடையாற்றியுடன் நிறைவு பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com